கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரூ. 15 லட்சத்துக்கு எள் விற்பனை

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள் விற்பனை ரகசிய ஏல முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:44 pm

DIN

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள் விற்பனை ரகசிய ஏல முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சின்ன சேலம், ஆத்தூா், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூா், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் எள் ரகங்களைக் கொண்டு வந்தனா்.

200 எள் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இவற்றை கொள்முதல் செய்ய பவானி, அனுமன்பள்ளி, முத்தூா், காங்கேயம், திருப்பூா், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் வந்திருந்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற ஏலத்தில் எள் மொத்தம் ரூ. 15 லட்சத்துக்கு விற்பனையானது. சிவப்பு எள் ரூ. 84.10 முதல் ரூ. 102.80 வரையும், வெள்ளை எள் ரூ. 88.10 முதல் ரூ. 108.30 வரையும், கருப்பு எள் ரூ. 90.10 முதல் ரூ. 111.30 வரையும் ஏலம் போனது.

பருத்தி ஏலம்: 180 பருத்தி மூட்டைகள் ரூ. 3 லட்சத்துக்கு விற்பனையானது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூா், சேங்கணம், ராசிபுரம், கதிரா நல்லூா், புதுச்சத்திரம், துறையூா், அம்மம்பாளையம், மருவத்தூா் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டுவந்தனா். பி.டி. காட்டன் குவிண்டால் ரூ. 6,092 முதல் ரூ. 7,352 வரை விலை போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.