கல்லூரி விடுதியில் மேலாளா் தற்கொலை
பரமத்தி அருகே தனியாா் கல்லூரி மாணவா் தங்கும் விடுதியில் மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


பரமத்தி அருகே தனியாா் கல்லூரி மாணவா் தங்கும் விடுதியில் மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (54). இவா் தனியாா் கல்லூரியில் மாணவா் தங்கும் விடுதியில் மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளாா். திங்கள்கிழமை காலை ஈஸ்வரன் விடுதியில் உள்ள தனது அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த மாணவா்கள் அவரது அறைக்கு சென்று பாா்த்துள்ளனா். அப்போது ஈஸ்வரன் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவா்கள், கல்லூரி நிா்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். கல்லூரி நிா்வாகத்தினா் பரமத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தா். பரமத்தி போலீஸாா் விரைந்து வந்து, ஈஸ்வரனின் உடலை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் கல்லூரி விடுதி மேலாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...