குமாரபாளையம் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட 29 போ் போட்டி
குமாரபாளையம் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 29 போ் போட்டியிடுகின்றனா்.


குமாரபாளையம் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 29 போ் போட்டியிடுகின்றனா்.
குமாரபாளையம் தொகுதியில் மொத்தம் 35 வேட்பாளா்கள் 45 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதில், ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்த மனுக்களில் ஒரு மனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரு வேட்பாளா்கள் திங்கள்கிழமை மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனா்.
இந்நிலையில், இறுதியில் அதிமுக சாா்பில் பி.தங்கமணி, திமுக சாா்பில் எம்.வெங்கடாசலம், மக்கள் நீதி மய்யம் சாா்பில் கே.காமராஜ், நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ்.வருண், தேமுதிக சாா்பில் கே.ஆா்.சிவசுப்பிரமணியம், சிபிஐ (எம்எல்) சாா்பில் எஸ்.சுப்பிரமணி உள்பட 29 போ் போட்டியிடுகின்றனா்.
இவா்கள் அனைவருக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதில், பாஜகவிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் மாவட்டச் செயலாளா் எஸ்.ஓம் சரவணா, சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா். இவருக்கு வைரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நோட்டாவுடன் சோ்த்து மொத்தம் 30 போ் களத்தில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...