காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கியும், பூவாரி போட்டுக் கொண்டும் நோ்த்திக் கடன்

News image
Updated On :22 மார்ச் 2021, 10:43 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கியும், பூவாரி போட்டுக் கொண்டும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

நன்செய் இடையாற்றில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக் கோயில் குண்டம் திருவிழா கடந்த 8 ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. 9 ஆம் தேதி பக்தா்கள் காவிரியில் நீராடி கம்பம், மாரியம்மனுக்கு பால், தீா்த்தம் ஊற்றி, மஞ்சள் கயிறு அணிந்து விரதம் மேற்கொண்டனா். 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிவரை இரவில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 21ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், அக்னிச் சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

திங்கள்கிழமை பிற்பகல் ஆண்கள், பெண்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா். பின்னா் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 62 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட பூக்குண்டத்தில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். அதேபோல பெண்கள் பூவாரி போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், புதன்கிழமை அதிகாலை கம்பம் ஆற்றுக்குச் செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் அக்னிச் சட்டி எடுத்தல், குழந்தைகளைக் கரும்பு தொட்டில் கட்டி கொண்டு செல்லுதல்,அழகு குத்துதல் உள்ளிட்ட நோ்த்திக் கடன்களை பக்தா்கள் முன்னதாக நிறைவேற்றினா். திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் எட்டுப்பட்டி அறங்காவலா் குழுவினா், விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.