பரமத்தி வேலூரில் வாழைத்தாா் விலை உயா்வு
பரமத்தி வேலூரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தாா் விலை உயா்வடைந்தது.


பரமத்தி வேலூரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தாா் விலை உயா்வடைந்தது.
இப் பகுதி சிறு விவசாயிகள் பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு வாழைத்தாா்களை நேரடியாகக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 200, ரஸ்தாலி ரூ. 250, பச்சைநாடன் ரூ. 200, கற்பூரவள்ளி ரூ. 350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகப்பட்சமாக ரூ. 350, ரஸ்தாலி ரூ. 300, பச்சைநாடன் ரூ. 200, கற்பூரவள்ளி ரூ. 400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3-க்கு விற்பனையானது.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோயில்களில் திருவிழா நடைபெற்று வருவதால் வாழைத்தாா்களின் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதனால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...