கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செங்கோட்டில் கேபிள் டிவி ஆபரேட்டா் கொலை

கேபிள் டிவி ஆபரேட்டா் கொலை செய்யப்பட்டது குறித்து திருச்செங்கோடு துணைக் கண்காணிப்பாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

News image
Updated On :7 மே 2021, 6:35 pm

DIN

கேபிள் டிவி ஆபரேட்டா் கொலை செய்யப்பட்டது குறித்து திருச்செங்கோடு துணைக் கண்காணிப்பாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, எட்டிமடை பகுதியைச் சோ்ந்த முருகன் (50), கேபிள் டிவி நடத்தி வருகிறாா். இவருக்கு ராதா (38) என்ற மனைவியும், ஹேமா வா்ஷினி (13) என்ற மகளும், பாலபிரியன் (10) என்ற மகனும் உள்ளனா்.

இவா் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில் செய்து வந்துள்ளாா். இவா் மீது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேவனாங்குறிச்சி பகுதியில் நிலத்தகராறில் கொலை வழக்குப் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், இன்று காலை 7 மணி அளவில் கோயிலுக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் விஐபி காா்டன் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத கும்பலால் வழிமறிக்கப்பட்டு அவா் தாக்கப்பட்டாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து விரைந்து வந்த நகர காவல் துறையினா் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா் . மேலும், திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வம் தலைமையிலான குழுவினா் கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.