இரு சக்கர வாகனங்களில் சுற்றியவா்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு
திருச்செங்கோட்டில் காலை 10 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.


திருச்செங்கோட்டில் காலை 10 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் காவல் ஆய்வாளா் பாஸ்கா் பாபு தலைமையில் துணை ஆய்வாளா் சுரேஷ் பாபு உள்ளிட்ட காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது காலை 10 மணிக்கு மேல் உரிய ஆவணங்கள், காரணங்கள் இன்றி வந்த இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி அறிவுரை கூறி திருப்பி அனுப்பினா். மேலும் ஒரே நேரத்தில் அதிக அளவில் வந்த சுமாா் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தி கரோனா பரவல், அதன் ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தினா். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள், உடன் வந்தவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. தொடா்ந்து இது போல காரணமின்றி சுற்றித் திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...