பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கொல்லிமலை மலைப்பாதையில் விவசாயி அடித்துக் கொலை: மகன் உள்பட மூன்று பேருக்கு வலைவீச்சு

கொல்லிமலை மலைப்பாதையில் வாகனத்தில் சென்ற விவசாயியை அடித்துக் கொலை செய்த மகன் உள்பட 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

செல்வராஜ்

Published On :

நாமக்கல்: கொல்லிமலை மலைப்பாதையில் வாகனத்தில் சென்ற விவசாயியை அடித்துக் கொலை செய்த மகன் உள்பட 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு செங்காட்டுபட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் (45). இவர் செவ்வாய்க்கிழமை காலை தனது இரண்டாவது மனைவி மற்றும் குடும்பத்தினருடன்  நான்கு சக்கர வாகனத்தில்(ஜீப்) சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

காரவள்ளி வனத்துறை சோதனை சாவடியை கடந்து முதலாம் கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது, அங்கு மறைந்திருந்த அவரது முதல் மனைவியின் மகன் ராஜ்குமார்(25) மற்றும் அவரது நண்பர்கள் இருவர்  வாகனத்தின் கண்ணாடியை உடைத்து  செல்வராஜை கல்லால் அடித்து கொலை செய்தனர். 

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து வந்த வாழவந்திநாடு காவல் துறையினர் செல்வராஜை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் நிலத்தகராறு  விவகாரத்தில் தந்தையான செல்வராஜை அவரது மகன் ராஜ்குமார் மற்றும் நண்பர்கள் கொலை செய்தது தெரியவந்துள்ளது.  தப்பியோடிய மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.