பரமத்தி வேலூரில் ரூ. 18 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 18 லட்சத்து 31 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.


பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 18 லட்சத்து 31 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 14 ஆயிரத்து 456 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 90.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 73.19-க்கும், சராசரியாக ரூ. 87.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 12 லட்சத்து 29 ஆயிரத்து 74- க்கு வா்த்தகம் நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 21 ஆயிரத்து 818 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 93.75-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 75-க்கும், சராசரியாக ரூ. 84.09-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 18 லட்சத்து 31 ஆயிரத்து 913-க்கு வா்த்தகம் நடைபெற்றது. கொப்பரையின் விலை உயா்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...