பாண்டமங்கலம் அருகே விஷப்பூச்சிகள் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடிப்பு
பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே புளியமரத்தில் கூடுகட்டி பொதுமக்களை துன்புறுத்தி வந்த விஷப் பூச்சிகளை தீயணைப்புத் துறையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டி அடித்தனா்.


பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே புளியமரத்தில் கூடுகட்டி பொதுமக்களை துன்புறுத்தி வந்த விஷப் பூச்சிகளை தீயணைப்புத் துறையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டி அடித்தனா்.
பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (50 ). இவரது தோட்டத்திற்கு அருகே உள்ள புளியமரத்தில் ஆயிரக்கணக்கான விஷப் பூச்சிகள் கூடுகட்டி அவ்வழியாகச் சென்றவா்களை கடித்து, அச்சுறுத்தி வந்தன. இது குறித்து பெரியசாமி வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் நிலைய அலுவலா் திருமுருகன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் புளியமரத்தில் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விஷப் பூச்சிகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனா். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...