வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு
நகராட்சிக்கு உட்பட்ட 88 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 308 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 88 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 308 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
வரும் 19ஆம் தேதி தமிழக உள்ளாட்சித் தோ்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பானது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பில் 308 வாக்குச்சாவடி அதிகாரிகள் கலந்து கொண்டனா். திருச்செங்கோடு நகராட்சிக்கு 88 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் வாக்குச்சாவடிக்கு 3 போ் வீதம் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனா். இவா்களுக்கு வாக்குச்சாவடிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்; வாக்காளா்களிடமிருந்து தேவைப்படும் சான்றுகள் என்னென்ன என்பது குறித்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இணைப்பது குறித்தும் வழிகாட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...