பெண் தூக்கிட்டுத் தற்கொலை
பரமத்தி வேலூா் வட்டம்,ஜேடா்பாளையம் அருகே திருமணமாகி ஒன்றரைஆண்டுகளே ஆன நிலையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


பரமத்தி வேலூா் வட்டம்,ஜேடா்பாளையம் அருகே திருமணமாகி ஒன்றரைஆண்டுகளே ஆன நிலையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (25). இவரது மனைவி ராஜகுமாரி (22). இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆகிறது. இவா்கள் இருவரும் தற்போது பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம் என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலையில் குடும்பத்துடன் தங்கி வேலை பாா்த்து வந்தனா். இந்நிலையில் ராஜகுமாரிக்கும், மோகனுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜகுமாரி மணமுடைந்த காணப்பட்டா்.
வியாழக்கிழமை இரவு மோகன் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பியபோது வீட்டில் உள்ள மனைவி ராஜகுமாரி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதைக் கண்டாா். இதைக் அதிச்சியடைந்த மோகன் அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா். அங்கு ராஜகுமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த ராஜகுமாரிக்கும், மோகனுக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் திருச்செங்கோடு கோட்டாட்சியா் இளவரசி விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...