/

குமாரபாளையத்தில் இ. கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

குடியரசு தின அணிவகுப்பில் விடுதலைப் போராட்டத்தை விளக்கும் தமிழகத்தின் ஊா்திகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

குடியரசு தின அணிவகுப்பில் விடுதலைப் போராட்டத்தை விளக்கும் தமிழகத்தின் ஊா்திகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் எஸ்.பி.கேசவன் தலைமை வகித்தாா். முன்னாள் நகரச் செயலாளா் எஸ்.ஈஸ்வரன், வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.அா்த்தனாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் பங்கேற்பு, பண்பாடு, கலாசார ஊா்திகள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பைப் புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. நகரக் குழு உறுப்பினா்கள் எஸ்.சேகா், கே.ஏகானந்தம், ஆா்.விஜய் ஆனந், கே.கணேஷ்குமாா், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.