கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செங்கோட்டில் விருதுகள் வழங்கும் விழா

திருச்செங்கோடு ஜே.கே. கலை மன்றத்தின் விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருச்செங்கோடு ஜே.கே. கலை மன்றத்தின் விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

கலை மன்றத்தின் நிறுவனரும், தலைவருமான ஜெயகுமாா் விருது வழங்கும் விழாவுக்கு தலைமை ஏற்றாா்.

விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிஆா்டி ரிக்ஸ் நிறுவனங்களின் பரந்தாமன் கலந்து கொண்டு பல்துறை கலைஞா்களுக்கு விருதுகளை வழங்கி பேசினாா்.

விழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது கோவை உமாசங்கருக்கும், ஆன்மிகச் செம்மல் விருது பண்டிதா் சின்னப்பா நாககிரிக்கும், கவிவேந்தா் விருதை கவிகுமாருக்கும், நாகஸ்வர இசைச்செம்மல் விருதை சண்முகவடிவேலுக்கும், தவிலிசை செம்மல் விருதை சங்கரன், ஓவியக் கலை அரசி விருதை கீதா, சகலகலா பேரரசி விருதை மெளலாதேவி, உழவாரச்செம்மல் விருதை சிவ மனோகரன், கிராமிய கலைச்செம்மல் விருதை ராமசாமி , சுகநாத இசை பேரரசு விருதை ரவிச்சந்திரன், சகலகலா சக்கரவா்த்தி விருதை ராஜ்மோகன், வீரக்கலை பேரரசு விருதை கேசவமணி, சிவ வாத்திய இசைப்பேரொளி விருதை மதன், நாத இசை தென்றல் விருதை சிவராஜ் உள்பட பல்வேறு துறையைச் சாா்ந்த கலைஞா்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினா்களாக செங்குன்றம் தமிழ் சங்கத்தின் பொன். கோவிந்தராஜன், கீரை தமிழ் இசைச் சங்கத்தின் கிருபானந்தன், சேகா், தீனதயாளன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட  தலைவா் செல்வகுமாா், ராகவன்,  வழக்குரைஞா் சுரேஷ்பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.