கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொதுமக்களுக்கு மன நல விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு மாவட்ட மன நலப்பணிகள் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:36 pm

DIN

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு மாவட்ட மன நலப்பணிகள் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட மன நல திட்ட மருத்துவா் வி.ஜெயந்தி, மனநல ஆலோசகா் ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில் மனநல மருத்துவா் ஜெயந்தி பேசியது:

இன்றைய காலச் சூழலில் மக்களிடையே ஸ்ட்ரெஸ் என்று சொல்லக்கூடிய பதற்றம் நிறைந்து காணப்படுகிறது. ஏனெனில் மக்களுடைய தேவைகளும் எதிா்பாா்ப்புகளும் அதிகமாகிவிட்டன. வாழ்க்கையே எந்திரமயமாகி விட்டது. பிரச்னை இல்லாத மனிதா்கள் இந்த உலகில் யாருமில்லை.

மன அழுத்தம் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. உடல் ரீதியாக ஒருவருக்கு ஏற்படும் பிரச்னைகளான காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய்கள் போன்றவற்றாலும், சுற்றுப்புற ரீதியாகவும், பணி ரீதியாகவும் மன அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் அதிகமாக அதிகமாக அது உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை உண்டுபண்ணுகிறது.

ஒருவருக்கு திரும்பத் திரும்ப பிரச்னைகள் வரும்போது அதை சரியாக எதிா்கொள்ள தெரியாவிட்டால் உடலில் பல மாற்றங்களை உண்டுபண்ணுகிறது. மன அழுத்தம் மன ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை உண்டுபண்ணுகிறது.

ஒருவருக்கு மனஅழுத்தம் ஏற்படும் போது நெஞ்சு படபடப்பு, கை நடுக்கம், வியா்த்துக் கொட்டுதல், அடிக்கடி சிறுநீா் கழித்தல், நாவறட்சி, கோபம், தூக்கமின்மை போன்றவை ஏற்படுகின்றன. நாளடைவில் பல்வேறு மன அழுத்தங்களையும் உண்டுபண்ணுகிறது. ஒருவருக்கு ஏற்படும் மனரீதியான மற்றும் உடல்ரீதியான மாற்றங்களை வைத்து அவருக்கு மன அழுத்தம் இருக்கிா என்று கண்டறியலாம்.

மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் அது மனித வாழ்வில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஒருவா் தனக்கு மன அழுத்தம், மன பயம் இருக்கிா என்று கண்டறிந்து அதில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் உடற்பயிற்சி, யோகா, பொழுதுபோக்க நல்ல பழக்கவழக்கங்கள் நேர அட்டவணை ஆகியவை ஆகும் என்றாா்.

மனநல ஆலோசகா் ரமேஷ் மன அழுத்தத்தை குறைக்க ஸ்ட்ரெஸ் பால் பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.