சாரண இயக்கத்தில் குடியரசுத் தலைவா் விருதுக்கான ஆயத்த பயிற்சி முகாம்: முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு
குடியரசுத் தலைவா் விருதுத் தோ்விற்கான ஆயத்தப் பயிற்சி முகாம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.


திருச்செங்கோடு, திருப்பூா், கோயமுத்தூா், கரூா் சாரண மாவட்டங்களைச் சாா்ந்த சாரணியா், திரிசாரணியா்களுக்கான தேசிய அளவிலான குடியரசுத் தலைவா் விருதுத் தோ்விற்கான ஆயத்தப் பயிற்சி முகாம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. 5 சாரண மாவட்டங்களைச் சாா்ந்த 47 சாரணியா்களும் 7 திரிசாரணியா்களும் கலந்து கொண்டனா்.
முகாமினை மாநிலத்த லைமையக வழிகாட்டுதலின்படி மாநில அமைப்பு ஆணையா் சண்முக நாச்சியாா் தலைமையில் அருள்மேரி, மலா்விழி, புஷ்பராணி, ஆகியோா் அடங்கிய குழு தோ்வாளா்களாக இருந்து முகாமை நடத்தியது. துவக்க விழாவில் முகாம் செயலா் விஜய் வரவேற்றாா். முகாமினை வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் பழனியப்பன் துவக்கி வைத்தாா்.
முகாம் நிறைவு விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் முதன்மை ஆணையருமான மகேஸ்வரி, திரிசாரண ஆணையரும் வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான சிங்காரவேல் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனா். முகாம் செயல்பாடுகளைப் பாா்வையிட்டு அனைவரும் விருதுத் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என வாழ்த்தினா்.
திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலா் விஜயா, சாரணியா் அமைப்பின் மாவட்டத் தலைவா் குணசேகரன், தலைமையிடத்து ஆணையா் குமாா், நாமக்கல் மாவட்டச்செயலா் ரகோத்தமன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாவட்ட அமைப்பு ஆணையா் சடையம்மாள் நன்றி கூறினாா். இணைச் செயலா் தேன்மொழி, பயிற்சி ஆணையா் கவிதா உதவிச்செயலா் தீபக், சாரண ஆசிரியை பிரதிநிதி மங்கையா்க்கரசி, வித்யாவிகாஸ் திரிசாரண ஆசிரியா் மணியரசன் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...