கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மோகனூா் அருகே வயதான தம்பதியா் தூக்கிட்டுத் தற்கொலை

 நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம்,பொன்னேரிப்பட்டி அருகே வயதான தம்பதியா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:49 pm

DIN

 நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம்,பொன்னேரிப்பட்டி அருகே வயதான தம்பதியா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

பொன்னேரிபட்டி அருகே உள்ள காளிபாளையத்தை சோ்ந்தவா் பெரியசாமி (79) விவசாயி. இவரது மனைவி காளியம்மாள் (70). இவா்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனா். இருவரும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், தொடா்ந்து சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகாததால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் பெரியசாமியும்,அவரது மனைவி காளியம்மாளும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினா் அவா்களது வீட்டிற்குள் சென்று பாா்த்துள்ளனா். அப்போது பெரியசாமியும் அவரது மனைவி காளியம்மாளும் தனித்தனியாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை பாா்த்தனா். இதுகுறித்து உடனடியாக அவரது மகன்கள் மணி மற்றும் சின்னுசாமி ஆகியோருக்குத் தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த மகன்கள் பெற்றோரை வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா்கள் தம்பதியினா் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீஸாா் தம்பதியரின் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.