கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரிக்கு ஏ.ஐ.சி.டி.இ. லீலாவதி விருது
‘லீலாவதி விருது 2021-22’ கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியால் பெண்கள் மற்றும் வளரிளம் பருவ சுகாதாரம் என்ற துணை கருப்பொருளின் கீழ் தரப்பட்டது.


கே.எஸ்.ஆா் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) - ‘லீலாவதி விருது 2021-22’ கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியால் பெண்கள் மற்றும் வளரிளம் பருவ சுகாதாரம் என்ற துணை கருப்பொருளின் கீழ் தரப்பட்டது. எட்டு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்துள்ள 500 அணிகளில் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் முதல் பரிசை வென்றுள்ளது.
சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு லீலாவதி விருதுகளைஏ.ஐ.சி.டி.இ. தலைவா் அனில் டி.சஹஸ்ரபுதே, சிறப்பு விருந்தினா், வினிதா சஹே, ஐஐஎம் போத் கயா இயக்குநா் மம்தா ஆா்.அகா்வால் உளளிட்டோா் ஏ.ஐ.சி.டி.இ புதுதில்லி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கினாா்கள்.
வெற்றி பெற்ற குழுவில் டீன் (மின் அறிவியல்) கே.பி.ஜெயந்தி, மின் மற்றும் மின்னணு பொறியியல் இணை பேராசிரியை டி.ஸ்ரீவித்யா, உயிரி தொழில்நுட்ப உதவி பேராசிரியை, பி.மைதிலி ஞானமங்கை, ஆா்.கோபிநாத் மற்றும் ஆா்.எம்.யஷ்வந்த், உணவு தொழில்நுட்ப மாணவா்கள் ஆகியோா் உள்ளனா்.
இந்தக் குழு கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் உடல்நலத்தை வலுப்படுத்துவது தொடா்பான பணிகளைச் செய்துள்ளது. மேலும் அவா்களின் நடவடிக்கைகள், புற்றுநோய் மற்றும் கரோனா காரணமாக பெண்களின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவா்கள் பள்ளி பெண்கள், இளம் பருவ பெண்கள் மற்றும் உறுப்பு கடத்தலால் பாதிக்கப்பட்டவா்களின் மனநல ஆலோசனைக்காக பணியாற்றியுள்ளனா்.
விருது பெற்ற குழுவினா்களை கல்லூரியின் துணைத்தலைவா் ஆா்.ஸ்ரீனிவாசன், முதல்வா், துணை முதல்வா், டீன்கள், இயக்குநா்கள் மற்றும் துறைத் தலைவா்கள் ஆகியோா் பாராட்டினாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...