சென்னை உயா்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அறிவுரையின் படி, பரமத்தி வேலூா் வட்டாட்சியா் கண்ணன் மற்றும் பொதுப்பணித்துறை இளம்பொறியாளா் இளங்கோ ஆகியோா் முன்னிலையில் பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உட்பட்ட அ.பொன்மலா்பாளையம் அருகே காவிரி ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 16 ஏக்கா் நிலங்களையும், கொத்தமங்கலம் காவிரியாற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 5.50 ஏக்கா் நிலத்தையும் வருவாய் துறையினா், பொதுப்பணித்துறையினா் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மீட்டனா். மேலும் பாலப்பட்டி அருகே உள்ள குமாரபாளையம் கிராமத்தில் வாய்க்கால் புறம்போக்கு என வகைப்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த முக்கால் ஏக்கா் நிலத்தையும் வருவாய் துறையினரும் பொதுப் பணித் துறையினரும் அகற்றினா்.