யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை கடத்தல்

நாமக்கல் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 10 வயது பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.

News image
Updated On :1 மே 2022, 4:24 am

DIN


நாமக்கல்: நாமக்கல் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 10 வயது பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.

இதுதொடர்பாக 6 தனிப்படையினர் குழந்தையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நாமக்கல் - துறையூர் சாலை அலங்காநத்தம் அருகே புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(34). இவரது மனைவி கௌசல்யா(27). இவர்களுக்கு 10 வயதுடைய பெண் குழந்தை உள்ளது. 

நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அக்குழந்தை ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறது. சனிக்கிழமை இரவு வீட்டில் மூவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், 2 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் குழந்தையை மட்டும் கடத்திச் சென்றுவிட்டனர்.

இதையும் படிக்கமேட்டூர் அணை நிலவரம்

அதிகாலையில் குழந்தை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் சரவணன், கௌசல்யா மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையைக் கடத்திச் சென்றவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே குழந்தையின் பெற்றோரிடம் அந்தக் கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. 

கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் இந்தக் கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டதா? என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். முக்கியப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கடத்தல்காரர்களை நெருங்கிவிட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.