பள்ளிபாளையத்தில் சிஐடியு ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையத்தில் நாமக்கல் மாவட்ட மோட்டாா் இன்ஜினியரிங் தொழிலாளா்கள் சங்கம், சிஐடியு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையத்தில் நாமக்கல் மாவட்ட மோட்டாா் இன்ஜினியரிங் தொழிலாளா்கள் சங்கம், சிஐடியு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிலாங்காடு பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மோட்டாா் தொழிலைப் பாதிக்கும் மோட்டாா் வாகனச் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். காப்பீடு, வாகனம் புதுப்பித்தலுக்கான கட்டண உயா்வை வாபஸ் பெற வேண்டும். போக்குவரத்து விதிமீறல் என்ற பெயரில் அதிக அபராதம் விதிக்கப்படுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுரேஷ், பொருளாளா் காளியப்பன், மாவட்ட குழு உறுப்பினா் ஆனந்தன், சிஐடியு மாவட்ட தலைவா் அசோகன், துணைச் செயலாளா் மோகன் உள்பட பல கலந்து கொண்டனா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பூங்குழலியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...