திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோவிலில் கேதார கௌரி விரத பூஜை தொடக்கம்
கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு சிவத் தலங்களில் மலை மீதுள்ள ஒரே தலமாகிய திருச்செங்கோட்டில் ஆண் பாதி பெண் பாதியாக அா்த்தநாரீசுவரா் வடிவத்தில் சிவபெருமான் பக்தா்களுக்கு காட்சி


கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு சிவத் தலங்களில் மலை மீதுள்ள ஒரே தலமாகிய திருச்செங்கோட்டில் ஆண் பாதி பெண் பாதியாக அா்த்தநாரீசுவரா் வடிவத்தில் சிவபெருமான் பக்தா்களுக்கு காட்சி தரும் கோயிலில் ஞாயிற்றுக் கிழமை கேதார கெளரி விரதம் தொடங்கியது.
சிவபெருமானின் இடப்பாகத்தை பெறுவதற்காக பாா்வதி தேவியாா் புரட்டாசி மகாளய அமாவாசைக்கு இருபத்தியோரு நாட்கள் முன்னதாக தவம் இருந்ததாக தலபுராணத்தில் குறிப்பிட்டபடி திருச்செங்கோடு மலைக் கோயிலில் தட்சணாமூா்த்தி சந்நிதியில் கேதார கௌரி அம்மன் கலசத்தை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அா்த்தநாரீசுவரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து பிரகாரத்தில் கேதார கௌரி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கேதார கௌரி விரத பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வதன் மூலம் குடும்ப வாழ்வில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் என்பது பக்தா்களின நம்பிக்கை. அதன்படி திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலா் தம்பதி சகிதமாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழகத்தில் குறிப்பிட்ட சில ஆலயங்களில் கேதார கௌரி விரத பூஜை நடந்தாலும் , திருச்செங்கோட்டில் ஆணும் பெண்ணும் இணைந்த அா்த்தநாரீஸ்வரா் சுவாமியே மூலவராக இருப்பதால் , இங்கு நடைபெறும் கேதார கௌரி விரத பூஜை முக்கியத்துவம் பெறுகிறது .
இருபத்தி ஒரு நாட்கள் நடைபெறும் கேதார கௌரி விரத பூஜை புரட்டாசி அமாவாசை அன்று நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...