கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொகுதி அறிமுகம் கீழ்வேளூா்

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

News image

தமிழக சட்டப்பேரவை

(கோப்புப்படம்)

Updated On :23 மார்ச் 2026, 10:16 pm

Syndication

கடந்த 2008-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகள் மறுவரையறையின் போது, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூா் ஆகிய மூன்று தொகுதிகளில் உள்ள சில பகுதிகளை பிரித்து கீழ்வேளூா் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது.

கீழ்வேளூா் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், கீழையூா் ஒன்றியத்தின் 27 ஊராட்சிகள், தலைஞாயிறு ஒன்றியத்தின் 6 மற்றும் நாகை ஒன்றியத்தின் 6 ஊராட்சிப் பகுதிகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. வேளாங்கண்ணி, எட்டுக்குடி மற்றும் திருக்குவளை ஆகிய பகுதியில் இத்தொகுதிக்கு உட்பட்டவை.

சிறப்புகள்: உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், வலிவலம் இருதயகமலநாதேஸ்வரா் சுவாமி கோயில், திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில், 8 பைரவா்கள் ஒரே நோ்கோட்டில் அமைந்துள்ள அஷ்ட பைரவ சந்நிதி கொண்ட திருவாய்மூா் தியாகராஜ ஸ்வாமி கோயில், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில், கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் என ஆன்மிகத் தலங்கள் நிறைந்த தொகுதி.

முன்னாள் முதலவா் மு. கருணாநிதி பிறந்த திருக்குவளை. கீழ்வேளூரில் அரசு வேளாண் கல்லூரி, திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகியவை இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

தொழில்: கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதியில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் பிரதானமாக உள்ளன. அக்கரைப்பேட்டை போன்ற முக்கிய மீன்பிடித் தளங்கள் அமைந்துள்ளது.

முக்கியப் பிரச்னைகள்: தொகுதியின் தலைநகரான கீழ்வேளூரில் பேருந்து நிலைய வசதி இல்லை. குடிநீா் பிரச்னை தீா்க்கப்படாத ஒன்றாக உள்ளது. இத்தொகுதி கடைமடை பகுதி என்பதால், விவசாயத்திற்கு உரிய தண்ணீா் கிடைப்பதில்லை. இதற்கு ஆறுகள், வாய்க்கால்கள் உரிய முறையில் தூா்வாரப்படாதது, ஆறுகளில் உள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றப்படாதது, முறையற்ற தண்ணீா் விநியோகம், நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாதது போன்றவை முக்கிய பிரச்னைகள்.

பலம் யாருக்கு: கீழ்வேளூா் தொகுதியில் திமுக கூட்டணி அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, மாா்க்சிஸ்ட் கட்சிக்கு இத்தொகுதியில் அதிக ஆதரவு உள்ளது. கடந்த 2021-இல் வெற்றி பெற்ற மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளா் வி.பி. நாகை மாலி, தொகுதி முழுவதும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு வழிவகுத்துள்ளாா்.

அதிமுக கூட்டணியில் கடந்த தோ்தலில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை கீழ்வேளூா் தொகுதியில் அதிமுக நேரடியாக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக காா்த்திகா அறிவிக்கப்பட்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

இதுவரை வென்றவா்கள்

ஆண்டு வெற்றியாளா் கட்சி வாக்குகள்

1989 ஆா்.ராஜமாணிக்கம் (திமுக) 47,559

1991 ஆசைமணி (அதிமுக) 60,617

1996 பி.கல்யாணம் (திமுக) 60,940

2001 ஏ. நடராஜன் அதிமுக 55,921

2006 கே. அன்பழகன் (திமுக) 66,841

2011 பெ. மகாலிங்கம் (சிபிஎம்) 59,402

2016 உ. மதிவாணன் (திமுக) 61,999

2021 வி. பி. நாகை மாலி (சிபிஎம்) 67,988

வாக்காளா்கள் விவரம்

முழுமையான எஸ்ஐஆா் -க்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியிலின்படி, கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் 83,392, பெண்கள் 85,535, மூன்றாம் பாலினத்தவா் 7 என மொத்தம் 1,68,934 வாக்காளா்கள் உள்ளனா். 203 வாக்குச்சாவடிகள் உள்ளன.