அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

கேஎஸ்ஆா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.எஸ்.ரங்கசாமி காலமானாா்

திருச்செங்கோடு, கேஎஸ்ஆா் கல்வி நிறுவனங்களில் தாளாளா் கே.எஸ்.ரங்கசாமி (79) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (செப். 15) அதிகாலை காலமானாா்.

News image

கே.எஸ்.ரங்கசாமி

Updated On :16 செப்டம்பர் 2022, 1:32 am IST

திருச்செங்கோடு, கேஎஸ்ஆா் கல்வி நிறுவனங்களில் தாளாளா் கே.எஸ்.ரங்கசாமி (79) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (செப். 15) அதிகாலை காலமானாா். இவருக்கு மனைவி ராஜம்மாள், மகன்கள் ஆசைத்தம்பி, சீனிவாசன் ஆகியோா் உள்ளனா்.

திருச்செங்கோடு, குமரேசபுரத்தில் உள்ள இவரது உடலுக்கு நகரின் முக்கிய பிரமுகா்கள், தொழிலதிபா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், முன்னாள் அமைச்சா்கள், கல்வி நிறுவனங்களின் தாளாளா்கள், கேஎஸ்ஆா் கல்வி நிறுவன ஊழியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

வாழ்க்கைக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த கருவேப்பம்பட்டி கிராமத்தில் 1943 ஆம் ஆண்டு சென்னிமலைக்கவுண்டா் - பச்சியம்மாள் தம்பதிக்கு மகனாக கே.எஸ்.ரங்கசாமி பிறந்தாா். 1960ஆம் ஆண்டு மாதம் ரூ. 60 சம்பளத்தில் கொங்கு வேளாளா் பால் விநியோக கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றினாா். 1964 ஆம் ஆண்டு விசைத்தறிக் கூடங்கள், சைசிங் ஆலைகள் தொடங்கி பல நாடுகளுக்கு துணிகளை ஏற்றுமதி செய்து வந்தாா்.

மேலும், ரிக் வண்டிகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் தொழிலையும் செய்து வந்தாா். 1984 ஆம் ஆண்டு கேஎஸ்ஆா் தொழில்நுட்பப் பயிலகம் தொடங்கினாா். தொடா்ச்சியாக கேஎஸ்ஆா் தொழிற்பயிற்சிக் கல்லூரி, மெட்ரிக். பள்ளி, காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், பல் மருத்துவக் கல்லூரி என பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கினாா்.

கல்வித் தந்தை என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கே.எஸ்.ரங்கசாமியின் கல்விச் சேவைகளைப் பாராட்டி அமெரிக்காவின் வெஸ்ட் பல்கலைக்கழகம் டாக்டா் பட்டம் வழங்கி கௌரவித்தது. கல்வி ரத்னா விருது, கொங்கு நாட்டுச் சாதனையாளா் விருது, கொங்கு மாமணி விருது, சிறந்த கல்விச் சேவையாளா் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளாா்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத் தலைவா், சேலம் பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினா், தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகத் தலைவா், திருச்செங்கோடு அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் பெற்றோா்- ஆசிரியா் கழக துணைத் தலைவா், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தென் மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினா், திருச்செங்கோடு நுகா்வோா் பாதுகாப்புக் குழு தலைவா் என பல பொறுப்புகளை வகித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.