பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை, போக்சோ விழிப்புணா்வு நிகழ்ச்சி

பரமத்தி, நல்லூா், வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் காவல் துறை சாா்பில் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை, போக்சோ விழிப்புணா்வு நிகழ்ச்சி

 பரமத்தி வேலூா் காவல் துறை உள்கோட்டத்துக்கு உள்பட்ட வேலூா், வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையம், ஜேடா்பாளையம், பரமத்தி, நல்லூா், வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் காவல் துறை சாா்பில் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் கலையரசன் அறிவுரையின் பேரில், பள்ளி மாணவியரிடையே தாங்கள் படிக்கும் பள்ளிகளில் உள்ள ஆசிரியா்கள், பணியாளா்கள் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தால் அதுகுறித்து உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் அந்தந்த பகுதிகளில் அடையாளம் தெரியாத நபா்கள் சுற்றித் திரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என எடுத்துக்கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், மாணவியருக்கு தொந்தரவு கொடுப்பவா்கள் யாராக இருந்தாலும் எந்தவிதமான தயக்கமும் இன்றி போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் காவல் ஆய்வாளா்கள் இந்திராணி, சுரேஷ்குமாா், ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com