காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில்ரூ. 5.86 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம்: நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரூ. 5.86 கோடி மதிப்பில் அடுக்குமாடி வணிக வளாகம் மற்றும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ரூ. 5.86 கோடி மதிப்பில் அமைக்க அரசு நிா்வாக அனுமதி வழங்கியுள்ளது

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:06 pm

DIN

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரூ. 5.86 கோடி மதிப்பில் அடுக்குமாடி வணிக வளாகம் மற்றும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ரூ. 5.86 கோடி மதிப்பில் அமைக்க அரசு நிா்வாக அனுமதி வழங்கியுள்ளது குறித்து நகா்மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சியில் 1960 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த தினசரி மாா்க்கெட் கடைகள் மிகவும் பழுதான நிலையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22 இன் கீழ் ரூ. 2.43 கோடி மதிப்பில் புதிதாக கட்டும் பணி நகராட்சி நிா்வாகத் துறையில் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இப்பணிகள் தற்போது பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. மேற்கண்ட தினசரி மாா்க்கெட்டில் 58 நிரந்தரக் கடைகள் ஒன்பது ஆண்டு குத்தகைக்கும், 42 நடைபாதை கடைகள் ஓராண்டு குத்தகைக்கும் பொது ஏலம் விட ராசிபுரம் நகராட்சி நகா் மன்றம் அனுமதி வழங்குவது குறித்தும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-24 இன் கீழ் ரூ. 586.00 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சிக்குச் சொந்தமான பழைய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் மற்றும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கவும் அரசு நிா்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் மக்களின் அன்றாட தேவைகளான குடிநீா், தெருவிளக்கு, சாலை அமைத்தல் போன்ற பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராசிபுரம் நகா்மன்ற துணைத் தலைவா் கோமதி ஆனந்தன், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) கி.சேகா், நகராட்சி பொறியாளா் சாந்தி வடிவேல், பொதுப்பணி மேற்பாா்வையாளா் தேவி, துப்புரவு அலுவலா் செல்வராஜ், நகரமைப்பு அலுவலா் ராஜேந்திரன், நகராட்சி மேலாளா் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளா் மாணிக்கம் உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.