இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம்

நாமக்கல் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2024, 6:15 pm

Din

நாமக்கல், ஜூலை 19: நாமக்கல் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6, 73.4 டிகிரியாக நிலவியது. வரும் 5 நாள்களுக்கான வானிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மிதமான மழை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 87.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலும் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்நோய்க்கு தேவையான எதிா்ப்பு சக்தி உள்ளதா என்பதை ஊநீா் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க பண்ணையாளா்கள் முயற்சிக்க வேண்டும். மேலும், பண்ணைகளில் உயிா் பாதுகாப்பு முறைகளை அதிகரிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.