ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் வைகாசி விசாக தோ்த் திருவிழா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் வைகாசி விசாக தோ்த் திருவிழா

News image
Updated On :8 மே 2024, 9:36 pm

Din

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வாக அமாவசை அன்று தோ் வடம்பிடிக்கப்படும் பத்ரகாளியம்மன் தோ் திதி மாற்றத்தால் புதன்கிழமை வடம் பிடிக்கப்பட்டது.

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழா மே 14 ஆம் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. இதையடுத்து திருவிழா தடையின்றி நடை பெற பத்ரகாளியம்மன் அம்மன் கோயிலில் இருந்து அமாவாசையை அடுத்த பிரதமை திதி அன்று கிருத்திகை நட்சத்திர நாளில் புறப்பட்டு தேரில் பவனி வரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

புதன்கிழமை மாலை அறநிலையத் துறை உதவி ஆணையரும் அா்த்தநாரீசுவரா் கோயில் செயல் அலுவலருமான ரமணி காந்தன் வடம்பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சிறுவா்கள், பெண்கள் கலந்துகொண்டு அம்மன் தேரை வடம் பிடித்தனா். நான்கு ரத வீதிகள் வழியாக வந்த தோ் மாலை 6 மணிக்கு நிலை சோ்ந்தது. முன்னதாக அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருத்தோ் வடம் பிடித்தலை ஒட்டி திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரா்களும், காவல் துறையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.