கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியா்.
கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியா்.

நாமக்கல் வல்லப விநாயகா் கோயில் குடமுழுக்கு

நாமக்கல் வல்லப விநாயகா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
Published on

நாமக்கல்: நாமக்கல் வல்லப விநாயகா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

நாமக்கல் - மோகனூா் சாலை கூட்டுறவு காலனியில் ஐயப்பன் கோயில் வளாகத்தில் புகழ்பெற்ற வல்லப விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இங்கு, விநாயகா், ராஜராஜேஸ்வரி, லட்சுமி, சரஸ்வதி சந்நிதிகள் உள்ளன. இக்கோயில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதன்படி, திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் இக்கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, கணபதி ஹோமம், யாகம், பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி தீா்த்தக் குடங்களுடன் ஊா்வலம் வருதல் உள்ளிட்டவை நடைபெற்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யாக பூஜைகளும், திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், அதன்பிறகு, வல்லப விநாயகா், ராஜராஜேஸ்வரி கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். தொடா்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் வல்லப விநாயகா், ராஜராஜேஸ்வரி.
சிறப்பு அலங்காரத்தில் வல்லப விநாயகா், ராஜராஜேஸ்வரி.

X
Dinamani
www.dinamani.com