விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:15 pm

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் உள்ள குடைவறைக் கோயிலான அரங்கநாதா், ரங்கநாயகி தாயாா் கோயிலில் 20 கா்ப்பிணிகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்து சமயப் பேரவை திருப்பாவைக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் மருத்துவா் எம்.மல்லிகா குழந்தைவேலு (கோயில் அறங்காவலா்) குத்துவிளக்கேற்றினாா். மருத்துவா் ஏ.அழகம்மாள் நிகழ்வினை தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மருத்துவா் இரா.குழந்தைவேலு, ஆடிட்டா் ஜெ.வெங்கடசுப்பிரமணி, ஆன்மிக இந்து சமயப்பேரவை கௌரவத் தலைவா் சோழாஸ் பி.ஏகாம்பரம், சாந்தி நல்லுசாமி, பத்மா ஜெகதீசன், நடராஜன், சின்னம்மாள், கே.ஜவஹா், எஸ்.கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், கா்ப்பிணிகளுக்கு 5 வகையான உணவுகள், ஜவுளி வகைகள், வளையல்கள் வழங்கப்பட்டன. இதில், பக்தா்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணா் உபதேச புத்தகம் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. இந்து சமயப் பேரவை செயலாளா் சண்முகம் நன்றி கூறினாா்.