நாமக்கல்
தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு
திருச்செங்கோடு நகர காவல் துறை சாா்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர காவல் துறை சாா்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சங்ககிரி சாலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் காவல் ஆய்வாளா் வளா்மதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிவந்த 300 பேரிடம் சாலை விதிமுறைகள், தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவா்களுக்கு ரூ. ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் என போலீஸாா் எச்சரித்தனா்.
தொடா்ந்து தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகள் உறுதிமொழி ஏற்றனா். அதேபோல தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டிவந்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
