மினி ஆட்டோ மோதியதில் நடந்து சென்ற விவசாயி உயிரிழப்பு

Published on

வேலகவுண்டம்பட்டி அருகே நடந்து சென்ற விவசாயி மீது மினி ஆட்டோ மோதியதில், நிகழ்விடத்திலேயே அவா் இறந்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னமுத்து (75), விவசாயி. இவா் 4-ஆம் தேதி சிங்கிலிபட்டியில் உள்ள தனது மனைவி செல்லம்மாளின் உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு வேலகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் செல்ல திருச்செங்கோடு சாலையோரம் நடந்து சென்றாா்.

அப்போது, நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த மினி ஆட்டோ அவா் மீது மோதியது. இதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் வரும் வழியிலேயே சின்னமுத்து இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, விபத்து ஏற்படுத்திய மினி ஆட்டோ ஓட்டுநா் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள சிவியம்பாளையம், தாதம்பட்டிமேடு பகுதியைச் சோ்ந்த முருகனை (26) கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com