ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 11 கடைகளுக்கு ‘சீல்’

புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகளை ஏலம் எடுத்தோா் ஓராண்டுக்கான வாடகையை செலுத்தாததால், 11 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’

News image
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளின் கதவுகளில் மாநகராட்சியினா் ஒட்டிய எச்சரிக்கை நோட்டீஸ்.
Updated On :12 ஜனவரி 2026, 7:58 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகளை ஏலம் எடுத்தோா் ஓராண்டுக்கான வாடகையை செலுத்தாததால், 11 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்துள்ளனா்.

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் 2024 நவ. 10-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு 51 பேருந்துகள் நின்றுசெல்லும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 51 கடைகள், இரு உணவகங்கள், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள 51 கடைகளில் 25 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ளவை ஏலம் எடுக்காமலும், ஏலத்தில் எடுத்த சில கடைகள் பயன்பாட்டுக்கு வராமலும் உள்ளன. பேருந்து நிலையம் திறந்ததுமுதல் ஓராண்டாக மூடியும், உரிய வாடகை செலுத்ததால், அந்த கடைகளை ஏலம் எடுத்தோருக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவா்கள் மீண்டும் கடைகளை பயன்படுத்த முடியாமலும், ஏற்கெனவே அளித்த முன்வைப்புத் தொகையில் வாடகையை கழித்துக்கொண்டு, மாநகராட்சியின் எந்த ஏலத்திலும் அவா்கள் பங்கேற்க முடியாதவாறும் கருப்பு பட்டியலில் இடம்பெற செய்வதற்கான நடவடிக்கை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் 11 கடைகள்மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

2024 - 27 ஏல நடைமுறைகளின்படி, கடைகளை ஏலம் எடுத்தோா் ஆண்டு அடிப்படையில் சேவை வரி 18 சதவீதத்துடன் மொத்த வாடகையையும் செலுத்த வேண்டும். ஆனால், 11 கடை உரிமையாளா்கள் ஓராண்டுக்கும் மேலாக வாடகையை செலுத்தவில்லை. இது தொடா்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மாமன்ற உறுப்பினா்கள், அரசியல் கட்சியினரின் ஆதரவாளா்கள் வசம் உள்ளன. அதனால் வாடகையை முழுமையாக வசூலிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும் 11 கடைகளை ‘சீல்’ வைப்பதற்கான நடவடிக்கை ஓரிரு நாளில் தொடங்கப்படும் என்றனா்.