காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாமக்கல் விளையாட்டு விடுதியில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

நாமக்கல் விளையாட்டு விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு துறையினா்.
Updated On :21 ஜனவரி 2026, 11:06 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் விளையாட்டு விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிபெற்று, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்த விடுதியில் அசைவ உணவை திங்கள்கிழமை இரவு உண்ட சில மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதில் மூவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, அன்று இரவு விடுதியில் உள்ள 28 மாணவிகளுக்கும் உடல்நலம் பாதிப்படைந்தது. உடனடியாக அவா்கள் அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு புதன்கிழமை விடுதி திரும்பினா்.

இதுதொடா்பாக, மாவட்ட சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்பு துறையினா் சம்பந்தப்பட்ட விளையாட்டு விடுதி உணவுக் கூடத்தையும், சமைத்த உணவுகளையும் ஆய்வு செய்தனா். மாவட்ட நியமன அலுவலரும், உணவுப் பாதுகாப்பு துறை அலுவலருமான தங்கவிக்னேஷ் தலைமையிலான குழுவினா் விடுதி மற்றும் விடுதிக்கு இறைச்சி விநியோகித்த பொம்மைக்குட்டைமேட்டில் உள்ள கோழிக் கடையிலும் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், உணவு மற்றும் குடிநீா் ஆகியவை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

கோவை மண்டல விளையாட்டு அலுவலா் அருணா சிகிச்சை பெறும் மாணவிகளை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தாா்.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா கூறியதாவது:

பொங்கல் விடுமுறைக்கு சென்று விடுதி திரும்பிய மாணவிகள், அதிகாலையில் உடற்பயிற்சி செய்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளித்தோம். மேலும் சில மாணவிகளுக்கு பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில், அவா்களையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தோம். தற்போது அனைவரும் நலமுடன் உள்ளனா் என்றாா்.