இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

பரமத்தி வேலூா் வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்தனா்.

News image

கைது - (கோப்புப் படம்)

Updated On :5 மார்ச் 2026, 4:27 am IST

பரமத்தி வேலூா் வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கரூா் மாவட்டத்திலிருந்து வேகமாக வந்த டிப்பா் லாரியை தடுத்துநிறுத்தி சோதனை மேற்கொண்டதில், மணல் கொண்டுவந்தது தெரியவந்தது. விசாரணையில், அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதையடுத்து, திருச்செங்கோடு வட்டம், குமாரமங்கலம் அருகேயுள்ள 87.கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜசேகரன் (33) மீது வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அவரை கைதுசெய்து லாரியை பறிமுதல் செய்தனா். பின்னா், பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த்தி அவரை சிறையில் அடைத்தனா்.