தாண்டவராயபுரத்தில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆத்தூரை அடுத்த தாண்டவராயபுரம் ஊராட்சி அண்ணா நகரில் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆத்தூர் - ராசிபுரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் நிலைய போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாலைக்குள் குடிநீர் கிடைக்க ஆவண செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் அரை மணிநேரம் வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து மாலையில் அந்தப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் குழாய் கிணற்றின் அருகே சிறிய அளவிலான டேங்க் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் வெள்ளம்: பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்கு ரூ.1000 கோடி தேவை! முதல்வர்

ரவி தேஜா - பிரியா பவானி ஷங்கரின் இருமுடி கட்டு பட டிரைலர்!

மிர்சாபூர்: தி மூவி டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


