இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பெண் வட்டாட்சியரிடம் நகை பறிப்பு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

சேலத்தில் பெண் வட்டாட்சியரிடம் நகையைப் பறித்த வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

சேலத்தில் பெண் வட்டாட்சியரிடம் நகையைப் பறித்த வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியபுதூர் ராஜாராம் நகரைச் சேர்ந்தவர் சாந்தி (56). இவர், தேசிய நெடுஞ்சாலை துறையில் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2013 செப்டம்பர் 28-ஆம் தேதி தனது மகளுடன் கோரிமேடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென சாந்தியை வழிமறித்து அவர் அணிந்திருந்த இரண்டே முக்கால் பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனர். 
இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வந்தனர். இதில் 2014 இல் சென்னை முகப்பேரைச் சேர்ந்த நிர்மல் (32), தேனி பெரியகுளம் அல்லிநகரைச் சேர்ந்த முருகன் (32) ஆகியோரை கைது செய்தனர்.
இதனிடையே அஸ்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கண்ணன், வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அரசு தரப்பில் அரசு வழக்குரைஞர் காந்திமதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி, வழக்கின் இரண்டாவது முக்கிய நபரான முருகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதனிடையே வழிப்பறி வழக்கில் தொடர்புடைய நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தந்த ஆய்வாளர்  கண்ணனை, மாநகர காவல் ஆணையர் கே. சங்கர் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.