இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பூலாம்பட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் கரோனா விதிகளை பின்பற்றிட வேண்டுகோள்

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கதவணைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தீநுண்மி தொற்றுப் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும்

News image
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :20 டிசம்பர் 2020, 11:01 pm

DIN

எடப்பாடி: எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கதவணைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தீநுண்மி தொற்றுப் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும் என பூலாம்பட்டி பேரூராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா விதிதளா்வுக்குப் பிறகு பூலாம்பட்டி காவிரிக் கதவணைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாள்களில் இங்கு விசைபடகு சவாரி செய்யவும், மின் உற்பத்தி நிலையம், நீா்உந்து நிலையம், நீா் சுத்திகரிப்பு நிலையங்களைப் பாா்வையிடவும், சுவைமிகுந்த மீன் உணவு வகைகளை உண்டு மகிழவும் சுற்றுலாப் பயணிகள் அதிகம்போ் வருகின்றனா்.

இங்கு வரும் மக்கள், முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், உரிய நோய்த்தொற்று பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டுகின்றனா். பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் பா.பிரகாஷ் உத்தரவின்பேரில், பூலாம்பட்டி பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள், ஞாயிற்றுக்கிழமை பரிசல் துறை, கதவணை நீா்த்தேக்கப் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முகக் கவசம் வழங்கினா். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.