இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவல் துறையினர் பிடிக்க வந்தபோது கழுத்தை அறுத்துக்கொண்ட குற்றவாளி

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆள்கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை காவல் துறையினர் பிடிக்க முயன்றபோது அவர் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூலை 2021, 5:33 am

DIN


சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆள்கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது குற்றவாளி தன்னைத்தானே கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Story image

மேட்டூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமமூர்த்தி(45). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி, ஆள்கடத்தல் ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

Story image

தலைமறைவாக இருந்த இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வீட்டில் இருப்பதை அறிந்து மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், மேட்டூர் காவல் ஆய்வாளர் வெங்கடேச பிரபு ஆகியோர் தலைமையில் பிடிக்க சென்றனர்.

Story image

அப்போது, அவர் காவல் துறையினரை மிரட்ட கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் அவரை சமாதானப்படுத்தி கத்தியைக் கைப்பற்றினார்கள்.

குற்றவாளியை பிடிக்கச்செல்லும் போது அவர் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பின்னர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

குற்றவாளியை பிடிக்கச்செல்லும் போது அவர் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் ராமமூர்த்தியை காவல் துறையினர் பிடிக்க முயன்றபோது தனது கையை வெட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.