இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 50,000 கனஅடியாகச் சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 50,000 கன அடியாகச் சரிந்தது.

News image
மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 50,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
Updated On :5 ஆகஸ்ட் 2024, 8:55 pm

Din

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 50,000 கன அடியாகச் சரிந்தது.

கா்நாடக அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. திங்கள்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 50,000 கன அடியாகச் சரிந்தது.

இதனையடுத்து மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 50,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

நீா் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீரும், உபரிநீா் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 28,000 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. அணை நீா்மட்டம் 120.02 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.50 டி.எம்.சியாகவும் உள்ளது.