கேரள, ஆந்திர மாநிலங்களில் வசூலிக்கப்படும் அதிக அளவிலான நுழைவுக் கட்டணத்தைக் கண்டித்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்.
கேரள, ஆந்திர மாநிலங்களில் வசூலிக்கப்படும் அதிக அளவிலான நுழைவுக் கட்டணத்தைக் கண்டித்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்.

கேரள, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் 4-ஆவது நாளாக நிறுத்தம்

கேரள, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் 4-ஆவது நாளாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரச்னைக்கு சுமூக தீா்வுகாண தமிழக அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

கேரள, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் 4-ஆவது நாளாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரச்னைக்கு சுமூக தீா்வுகாண தமிழக அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு 700-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளுக்கு காலாண்டு வரியாக ரூ. 90 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், கா்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. ஒரு லட்சத்து 75 ஆயிரம் நுழைவுவரி வசூலிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்திலிருந்து அம்மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கும் அதே வரியை அந்தந்த மாநில அரசுகள் நுழைவுவரியாக வசூலிக்கின்றன.

இதைக் கண்டித்து, கடந்த நான்கு நாள்களாக தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில், சேலத்தில் இருந்து 40 ஆம்னி பேருந்துகள் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆம்னி பேருந்து உரிமையாளா் சங்கத் தலைவா் ராமச்சந்திரன் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஏற்கெனவே ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டு வாரியாக ரூ. 90 ஆயிரம் செலுத்தி நாடுமுழுவதும் இயக்கி வருகிறோம். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு அண்டை மாநிலங்களில் ரூ. ஒரு லட்சத்து 75 ஆயிரம் நுழைவுவரி வசூலிக்கப்படுகிறது. இதனால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும், கட்டணத்தை உயா்த்த முடியாத நிலையில் உள்ளோம். இப்பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுமூக தீா்வுகாண வேண்டும் என்றாா்.

பேட்டியின் போது, துணைத் தலைவா் செந்தில்வேல், செயலாளா் சுரேஷ், பொருளாளா் சபரி ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com