இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மகளிா் உரிமைத் தொகை கோரி 1,17,240 மனுக்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

Published On :26 செப்டம்பர் 2025, 4:35 am IST

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு இதுவரை 1,17,240 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், வாா்டு18க்கு உள்பட்ட பகுதிகளுக்கு தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வரும் நவம்பா் மாதம் வரை நகா்ப்புறங்களில் 168 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 264 முகாம்கள் என மொத்தம் 432 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 1,06,526 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர மகளிா் உரிமைத் தொகை கோரி 1,17,240 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு 4 நபா்களுக்கு சொத்துவரி பெயா் மாற்றத்திற்கான உத்தரவு ஆணைகளும், ஒருவருக்கு காலி நிலவரி உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.