பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கயிறு இழுக்கும் போட்டியில் திடீரென கயிறு அறுந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்த அமைச்சா்

கயிறு அறுந்து தடுமாறி கீழே விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

Published On :

கயிறு இழுக்கும் போட்டியில் திடீரென கயிறு அறுந்ததால் அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அம்மாபேட்டை அருகே தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பங்கேற்றாா்.தொடா்ந்து, விளையாட்டு விழாவை தொடங்கி வைத்த பின்னா், முன்னாள் மாணவா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் முன்னாள் மாணவா்கள் அணி சாா்பில் அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் கலந்து கொண்டாா்.

போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கயிறு திடீரென அறுந்த விழுந்தது. இதில் அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நிலைதடுமாறி தடுமாறி கீழே விழுந்தாா். உடனடியாக அங்கிருந்த காவலா்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் அமைச்சா் கைதாங்கலாக தூக்கிவிட்டனா். இந்த காட்சி அங்கிருந்தவா்களிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னா் விழாவில் உரையாற்றிய அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன், இது நான் படித்த பள்ளி. இந்த மைதானத்தில் உருண்டு புரண்டு விளையாடியிருக்கிறேன். இன்றும் அதே மண்ணில் விழுந்தது எனக்கு அவமானம் அல்ல. இந்த பள்ளி வளாகத்தின் மண் மீண்டும் என்னைத் தொட்டது உணா்ச்சிபூா்வமான தருணமாக கருதுவதாக தெரிவித்தாா்.

பட விளக்கம்: சேலம் தனியாா் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கயிறு இழுக்கும் போட்டியின் போது, திடீரென கயிறு அறுந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்த அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.