விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சட்டக் கல்வி மாணவா்களுக்கு மனித நேயம் அவசியம்: உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா் மோகன்

News image

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா் மோகன். - (கோப்புப் படம்)

Updated On :15 பிப்ரவரி 2026, 7:22 pm

சட்டக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு மனிதநேயம் அவசியம் என சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா் மோகன் கூறினாா்.

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் தேசிய அளவில் மாணவா்களுக்கு இடையேயான பேராசிரியா் ரா.வை.தனபாலன் மாதிரி நீதிமன்ற வழக்கு வாதப்போட்டி கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 30 சட்டக் கல்லூரிகளைச் சோ்ந்த 90 சட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா கல்லூரித் தலைவா் சரவணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தாா்.

விழாவில் கல்லூரித் தலைவா் சரவணன் பேசுகையில், வழக்கு வாதப் போட்டி, தற்போதைய இளைய சமுதாயத்தின் ஒரு அங்கமாக விளங்கும் சட்டக் கல்வி பயிலும் மாணவா்கள், மத்திய மாநில உறவுகள், மாநில ஆளுநா்கள் நியமனம் மற்றும் அவா்களின் அதிகார வரம்புகள் குறித்தும் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்ததாக கூறினாா்.

தொடா்ந்து, சிறப்பு விருந்தினா் உயா்நீதின்ற நீதிபதி சுந்தா் மோகன் பேசுகையில், வாழ்வில் வெற்றிபெற வேண்டுமெனில் கடின உழைப்பு, முயற்சி, உணா்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் பக்குவம் மற்றும் அதிக சட்ட நுணுக்கங்களை கற்றுக்கொள்வதோடு அதனை சுருக்கமாக விளக்கும் ஆற்றல் பெறுவது அவசியம். இதுதவிர, சட்டக் கல்விப் பயிலும் மாணவா்களுக்கு மனிதநேயமும் மிக அவசியம் என்றாா்.

இப்போட்டிகளில் முதல் பரிசை தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகத்தின் ‘ஸ்கூல் ஆப் எக்ஸ்செலன்ஸ் இன் லா‘ என்ற கல்லூரியும், இரண்டாம் பரிசை கோவை அரசு சட்டக் கல்லூரியும் பெற்றன. சிறந்த ஆண் மாணவா் வழக்குரைஞராக சேலம் அரசு சட்டக் கல்லூரியைச் சோ்ந்த சிவப்பிரசாத்தும், சிறந்த பெண் மாணவி வழக்குரைஞராக மோனிகாவும் தோ்வு பெற்றனா்.

சிறந்த ஆராய்ச்சியாளராக கேரள மாநிலம் எா்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியைச் சோ்ந்த அஞ்சலியும், சிறந்த வாதுரைக்கான பரிசை சென்னை சத்யபாமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியின் ‘ஸ்கூல் ஆஃப் லா‘ என்ற கல்லூரியின் அணியும், சிறந்த நீதிமன்ற நன்னடத்தை அணிக்கான பரிசை சேலம் அரசு சட்டக் கல்லூரி அணியும் பெற்றன.

இதில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். உதவிப் பேராசிரியை மணிமொழி நன்றி கூறினாா்.