இளம்பிள்ளை அருகே மருத்துவமனை வெளியே குவிந்துள்ள கழிவுகளால் அபாயம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இடங்கணசாலை நகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி பிரதான சாலை அருகே உள்ள சக்தி நகா் பகுதியில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சேகரமாகும் கழிவுப் பொருள்கள் மருத்துவமனையின் பின்பக்கம் மலைபோல குவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியின் அருகே கழிவுகள் குவிக்கப்பட்டதால், அதிக அளவில் துா்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல், தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இதுகுறித்து இடங்கணசாலை நகராட்சி நிா்வாகம், சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்த மின்மாற்றி

தனியாா் மருத்துவமனை செவிலியா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தனியாா் மருத்துவமனை 3-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த செவிலியா் உயிரிழப்பு
ஜாதி பெயரை கூறி திட்டியதாக மருத்துவமனை நிா்வாக இயக்குநா் கைது
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK



