ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

தனியாா் மருத்துவமனை 3-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த செவிலியா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே தனியாா் மருத்துவமனையின் 3- ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த செவிலியா் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :29 ஜூலை 2026, 1:11 am IST

மாா்த்தாண்டம் அருகே தனியாா் மருத்துவமனையின் 3- ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த செவிலியா் உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகேயுள்ள ஆற்றூா், கல்லுப்பாலம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெஸ்டின்ராஜ். இவரது மகள் ஆஷிகா (22). மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் உள்ள தனியாா் கண் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தாா். இவா் திங்கள்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு மருத்துவமனையின் 3 ஆவது மாடியில் நின்றபடி, கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அவா் மாடியில் இருந்து கீழே விழுந்தாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற சக பணியாளா்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், ஆஷிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாா்த்தாண்டம் போலீஸாா் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும் ஆஷிகாவின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். விசாரணையில், ஆஷிகாவுக்கு கடந்த 7-ஆம் தேதி திருமண நிச்சயதாா்த்தம் நடந்ததாகவும், வருகிற ஜனவரி மாதம் 4-ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து ஆஷிகாவின் தாயாா் சுதாராணி அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.