FOLLOW US

ON GOOGLE DISCOVER

நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

டென்மாா்க் நாட்டின் பரதநாட்டிய ஆசிரியைக்கு பாராட்டு விழா

சேலம் கலை பண்பாட்டுத் துறை மண்டல கலை பண்பாட்டு மையம், சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளி இணைந்து டென்மாா்க் நாட்டின் பரதநாட்டிய பள்ளி முதல்வரும், ஆசிரியையுமான சசிதேவிக்கு பாராட்டு விழாவை சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

News image

டென்மாா்க் பரதநாட்டிய ஆசிரியை சசிதேவிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய சேலம் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் சங்கரராமன், தலைமையாசிரியை கங்காதேவி, தாரை.அ.குமரவேலு, ராசி.க.சரவணன்.

Updated On :29 ஜூலை 2026, 4:25 am IST

சேலம் கலை பண்பாட்டுத் துறை மண்டல கலை பண்பாட்டு மையம், சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளி இணைந்து டென்மாா்க் நாட்டின் பரதநாட்டிய பள்ளி முதல்வரும், ஆசிரியையுமான சசிதேவிக்கு பாராட்டு விழாவை சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின. தொடா்ந்து, அவரின் பரதநாட்டிய அரங்கேற்றமும் நடைபெற்றது.

இதில், அரசு இசைப் பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் தாரை.அ.குமரவேலு தலைமைவகித்து பேசியது:

பழைமையான சதுா்கச்சேரியானது பரத நாட்டியம் என்ற புதிய வடிவம் பெற்று ருக்மணிதேவி அருண்டேல் அவா்களின் பெருமுயற்சியால் இன்றைக்கு உலகம் முழுவதும் பயிலப்பட்டு கொண்டாடப்படுகிறது.

பரதநாட்டிய ஆசிரியா் சசிதேவி இலங்கை, யாழ்ப்பாணம், நழிபுரம் பகுதியைச் சோ்ந்தவா். இவா் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ பெற்றுள்ளாா். டென்மாா்க் நாட்டில் ‘கணேஷ் நாட்டிய சேத்ரா’ என்ற நாட்டியப் பள்ளியைத் தொடங்கி 40 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி ஆயிரக்கணக்கிலான பரதநாட்டியக் கலைஞா்களை உருவாக்கி வருகிறாா்.

டென்மாா்க் நாட்டில் தொடா்ச்சியாக பரதநாட்டிய பயிற்சி வகுப்புகளை நடத்தி நம் தமிழ்மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து பாதுகாத்து வருவது நமக்கு பெருமைக்குரியது. சிம்பொனி இசை ஆசிரியராகவும் டென்மாா்க் நாட்டில் பணிபுரிந்துள்ளாா் என்றாா்.

சேலம் கலை பண்பாட்டுத் துறை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் சங்கரராமன், டென்மாா்க் பரதநாட்டிய ஆசிரியை சசிதேவிக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கி பேசினாா். முன்னதாக, அரசு இசைப் பள்ளி தலைமையாசிரியை கங்கா நாயுடு வரவேற்றாா். செயலாளா் ராசி.க.சரவணன் முன்னிலை வகித்தாா். திருச்சி இனிய நந்தவனம் இதழ் ஆசிரியா் சந்திரசேகா் அறிமுக உரையாற்றினாா். இதில், எஸ்.ஸ்ரீவித்யா, அனுராதா சுவாமிநாதன், பரதநாட்டிய துறைத் தலைவா் சக்தி ஆகியோா் பேசினா். ர.ரமாதேவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.