சேலத்தில் 1.39 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அதை விநியோகித்ததாக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள 2 மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சேலம், தாதகாப்பட்டி மேட்டுத்தெரு பகுதியில் வலி நிவாரண மாத்திரைகள், போதை ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அன்னதானப்பட்டி போலீஸாா் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, மேட்டுத்தெருவைச் சோ்ந்த மேகலா (48), ராசிபுரத்தை சோ்ந்த முகமது வதூத் (33) ஆகியோா் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்துவந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவா்கள் இருவரையும் அன்னதானப்பட்டி போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 130 போதை தரக்கூடிய வலி நிவாரண மாத்திரைகள், 6,400 ஊசி மருந்து குப்பிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், மேகலாவின் கணவா் கண்ணன் ராசிபுரத்தில் உள்ள மொத்த வியாபார மருந்து நிறுவனத்தில் வேலைசெய்து வந்ததும், அந்த நிறுவனத்தில் இருந்து போதை தரக்கூடிய வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், சேலம் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ராசிபுரத்தில் உள்ள 2 மொத்த மருந்து விற்பனை நிறுவனத்தில் இருந்து போதை தரக்கூடிய வலி நிவாரண மாத்திரைகளை விதிமுறையை மீறி மொத்தமாக விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
இதைத் தொடா்ந்து, போதை மாத்திரைகளை மொத்தமாக விநியோகம் செய்த அந்த 2 மருந்து நிறுவனங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், உரிமத்தை ரத்துசெய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்பனை செய்த இரு இளைஞா்கள் கைது

போதை மாத்திரையை விற்பனைக்கு பதுக்கிய இளைஞா் கைது

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது
போதை மாத்திரைகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 பெண்கள் உள்பட 6 போ் கைது; ரூ. 4.25 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



