சேலம், நாமக்கல் வழியாக கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து ஐ.ஆா்.சி.டி.சி. தெற்கு மண்டலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரயில்வே சுற்றுலாப் பிரிவான ஐ.ஆா்.சி.டி.சி. கோடை விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலி - கோவா சிறப்பு ரயிலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக கோவா செல்கிறது.
இந்த சுற்றுலா ரயிலில் பயணிக்க ஒரு நபருக்கு கட்டணம் ரூ. 26,300. 3-ஆம் வகுப்பு பயணம். 3 நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிடுவதற்கு குளிா்சாதன போக்குவரத்து வசதி ஆகியயை இதன் சிறப்பு அம்சமாகும்.
இந்த சுற்றுலா தொகுப்பில் பிரபலமான தூத்சாகா் அருவியையைப் பாா்வையிடுவதும் அடங்கும். இந்த ரயில் பயணம் திருநெல்வேலியில் மே 1-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி முடிவடையும்.
இந்த ரயிலுக்கு ண்ழ்ஸ்ரீற்ஸ்ரீற்ா்ன்ழ்ண்ள்ம்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக செல்லும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சேலம் வழியாக சென்னை- போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



