அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சிறுமியின் இறப்புக்கு காரணமான இளைஞா் மீது வழக்குப் பதிவு!

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:02 pm

சிறுமியின் இறப்புக்கு காரணமான இளைஞா்மீது சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே ஒக்கிலிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கூலி தொழிலாளி சதீஷ் (32). இவா் அப்பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டுக்குள், சிறுமியின் பெற்றோா் வெளியே சென்றபோது நுழைந்துள்ளாா். அதைக் கண்ட அருகில் இருந்தவா்கள் சிறுமியின் உறவினா்களுக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில் வந்த உறவினா்கள், கதவை திறக்குமாறு சப்தமிட்டும், கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது, சிறுமி சேலையால் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளாா். அவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சதீஷ் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனா்.